அக்டோபர் 7... KLM விமான சேவை நிறுவனம் தொடங்கப்பட்ட தினம்...
1919-ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்ட்டர்டாமில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தை சிறப்பிக்க அந்நாட்டின் அஞ்சல்துறை 1959-ஆம் ஆண்டு இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
அக்டோபர் 7... KLM விமான சேவை நிறுவனம் தொடங்கப்பட்ட தினம்...
1919-ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்ட்டர்டாமில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தை சிறப்பிக்க அந்நாட்டின் அஞ்சல்துறை 1959-ஆம் ஆண்டு இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
1930-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த கிரிக்கெட் வீரரான ரிச்சி பெனார்ட், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றினார்... அவரை கெளரவ படுத்த ஆஸ்திரேலியா அஞ்சல்துறை 2020-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
அக்டோபர் 5... இராமலிங்க அடிகளார் பிறந்த தினம்…
சமய நல்லிணக்கத்திற்காக அவரால் தொடங்கப்பட்டது தான் சத்திய ஞான சபை... எந்த சமயமும், எல்லா மத நெறிகளும் சம்மதம் என்று கூறிய வள்ளலார் அவர்களை இந்திய அஞ்சல்துறை 2007-ஆம் ஆண்டு 5-ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை வெளியிட்டு கெளரவப்படுத்தியது...
அக்டோபர் 4... ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் துவங்கப்பட்ட தினம்...
1883-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் இருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரம் வரை பயணிக்க தொடங்கப்பட்ட ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை சிறப்பிக்க ரோமானியா நாட்டின் அஞ்சல்துறை 2010-ஆம் ஆண்டு இரண்டு அஞ்சல்தலைகள் வெளியிட்டது...
அக்டோபர் 3... ஜெர்மனி இணைப்பு தினம்...
1990-ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு ஜெர்மனி என்ற இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டதின் 20-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க ஜெர்மனி நாட்டின் அஞ்சல்துறை 2010-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
அக்டோபர் 2... சர்வதேச அகிம்சை தினம்...
இந்திய சுதந்திர போராட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரை கெளரவபடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் நியூயார்க் அஞ்சல்துறை 2008-ஆம் ஆண்டு ஒரு டாலர் மதிப்புள்ள அஞ்சல்தலையை வெளியிட்டது...
அக்டோபர் 1... சர்வதேச முதியோர் தினம்...
1991-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தால் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த தினத்தை சிறப்பிக்க சீன அஞ்சல்துறை 2018-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...