நவம்பர் 30... ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம்...
1858-ஆம் ஆண்டு பிறந்து தாவரங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 1958-ஆம் ஆண்டு 15-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 30... ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம்...
1858-ஆம் ஆண்டு பிறந்து தாவரங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 1958-ஆம் ஆண்டு 15-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 29... தக்கர் பப்பா என்று அழைக்கப்படும் அமிர்தலால் விட்டல்தாஸ் தக்கர் அவர்களின் பிறந்த தினம்...
1869-ஆம் ஆண்டு பிறந்து பழங்குடி மக்கள் மற்றும் அரிஜன மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தக்கர் பப்பா அவர்களை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 1969-ஆம் ஆண்டு 20-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 28... சர் சிட்னி லோலன் நினைவு தினம்...
ஆஸ்திரேலியா நாட்டின் தலை சிறந்த நவீன ஓவியரான லோலன் அவர்களையும் அவர் வரைந்த அண்டார்டிகா பற்றிய ஓவியங்களையும் ஆஸ்திரேலிய-அண்டார்டிகா அஞ்சல்துறை 1989-ஆம் ஆண்டு சிறப்பித்து நான்கு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
நவம்பர் 27... ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் பிறந்த தினம்...
1907-ஆம் ஆண்டு பிறந்த ஹரிவன்ஷ் அவர்கள் ஹிந்தி இலக்கியத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்... அவரை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 2003-ஆம் ஆண்டு 5-ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 26... இந்திய அரசியலமைப்பு தினம்...
1949-ஆம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணய சபையால் வகுக்கப்பட்ட சட்டங்கள் ஏற்று கொள்ளப்பட்டதை கெளரவப்படுத்தும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது... இதனை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை 2015-ஆம் ஆண்டு 5-ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 25... சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்...
1999-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தினத்தை சிறப்பிக்க ஜெர்மனி நாட்டின் அஞ்சல்துறை 2000-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 24... உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகம் வெளியிடப்பட்ட தினம்...
1859-ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் அவர்கள் தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்த முடிவுகளை புத்தகமாக வெளியிட்டார்... இப்புத்தக வெளியீட்டின் 150-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க ஜிப்ரால்டர் நாட்டின் அஞ்சல்துறை 2009-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 23... இசை ஜூக்பாக்ஸ் அறிமுகபடுத்தபட்ட தினம்...
அமெரிக்காவில் 1889-ஆம் ஆண்டு லூயிஸ் கோல்டு அவர்களால் கலிபோர்னியா மாகாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஜூக்பாக்ஸை சிறப்பிக்க அமெரிக்க அஞ்சல்துறை 1995-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 22... ஜான் F கென்னடி நினைவு தினம்...
அமெரிக்க அதிபராக 1961-ஆம் ஆண்டு தனது 43-வது வயதில் பதவியேற்ற ஜான் F கென்னடி அவர்கள், 1963-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியன்று சுட்டு கொல்லப்பட்டார்... அமெரிக்காவின் 35-வது அதிபரான ஜான் F கென்னடி அவர்களை கெளரவபடுத்த அமெரிக்க அஞ்சல்துறை 1964-ஆம் ஆண்டு 5-சென்ட் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 21... சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல்தலை...
1947-ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த பிறகு இந்திய அஞ்சல்துறை நவம்பர் 21-ஆம் தேதி அஞ்சல்தலை வெளியிட்டது...
நவம்பர் 20... திப்பு சுல்தான் பிறந்த தினம்…
1750-ஆம் ஆண்டு பிறந்து இந்தியாவின் மைசூர் பகுதியின் மன்னராக ஆட்சி புரிந்த திப்பு சுல்தான் அவர்களை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை 1974-ஆம் ஆண்டு 50-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை வெளியிட்டது...
நவம்பர் 19... சர்வதேச ஆண்கள் தினம்...
உலகில் உள்ள ஆண்களை கெளரவபடுத்த அவர்களின் உரிமைகளை பாதுகாக்க டிரினிடாட் தீவில் 1999-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட சர்வதேச ஆண்கள் தினத்தை சிறப்பிக்க போஸ்னியா நாட்டின் அஞ்சல்துறை 2016-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 18... சர்வதேச இளைஞர்கள் சுற்றுலா மாநாடு...
சுற்றுலா துறையில் இளைஞர்களின் பங்களிப்பை முன்னெடுத்து இந்தியாவில் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 17... நதானியல் பால்மர் அண்டார்டிகா கண்டத்தை 1820-ஆம் ஆண்டு கண்டுபிடித்த தினம்...
அமெரிக்காவின் கடல் ஆய்வாளர் நதானியல் பால்மர் அண்டார்டிகா கண்டத்தை கண்டுபிடித்ததை சிறப்பிக்க 1988-ஆம் ஆண்டு அமெரிக்க அஞ்சல்துறை 25-சென்ட் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 16... சர்வதேச சகிப்புத்தன்மை தினம்...
1995-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தை சிறப்பிக்க அல்ஜீரியா நாட்டின் அஞ்சல்துறை 2002-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
நவம்பர் 15... ஆச்சார்யா வினோபா பாவே நினைவு தினம்...
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மகாத்மா காந்தியடிகளின் ஆன்மீக சீடரும், பூதான இயக்கத்தை தொடங்கியவருமான வினோபா அவர்களை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 1983-ஆம் ஆண்டு 50-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
In the year 1923, Frederick Banding was awarded Nobel Prize in Medicine... The day campaigns on different factors that influences the risk of diabetes and its complications...
World Diabetes Day was commemorated by Algerian Postal Administration with the release of a postage stamp in the year 2003...
நவம்பர் 14... உலக நீரிழிவு நோய் தினம்...
1991-ஆம் ஆண்டு முதல் அனைத்து உலக நாடுகளிலும் அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு அல்ஜீரியா நாட்டின் அஞ்சல் துறை 2003-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
The first Rugby League World Cup was held in France on this day in the year 1954... The idea for this World cup was initiated in the year 1930 by France...
During the inaugural World Cup, only four countries France, Australia, England and New Zealand participated in it... But, today in the recently held World Cup in 2017, the participating countries increased to 16...
From the year 2008, the Rugby League World Cup was held once in four years and so far it was won by only three countries Australia, England and New Zealand...
Rugby League World Cup was commemorated by British Postal Administration in the year 2015 with the release of eight postage stamps...
நவம்பர் 13... முதல் ரக்பி லீக் உலக கோப்பை...
1954-ஆம் ஆண்டு முதல் முறையாக ரக்பி லீக் உலக கோப்பை பிரான்ஸ் நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது... ரக்பி உலக கோப்பையை சிறப்பிக்க இங்கிலாந்து அஞ்சல்துறை 2015-ஆம் ஆண்டு எட்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
Akihito was coronated as the 125th Emperor of Japan on this day in the year 1989... After succeeding to the throne, Emperor Akihito made all out efforts to bring the Imperial family closer to the Japanese people...
He and Empress Michiko made official visits to eighteen countries and to all Prefectures of Japan...
To mark the 30th year of Emperor Akihito's coronation, Japanese Postal Administration released two postage stamps in the year 2019...
நவம்பர் 12... ஜப்பான் நாட்டின் 125-வது மன்னராக அகிஹிட்டோ பதவியேற்ற தினம்...
1989-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மன்னராக அகிஹிட்டோ பதவியேற்றதின் 30-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க ஜப்பான் நாட்டு அஞ்சல்துறை 2019-ஆம் ஆண்டு இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
நவம்பர் 11... தேசிய கல்வி தினம்...
இந்திய சுதந்திர போராட்ட வீரரும் கல்வியாளருமான மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம் நவம்பர் 11... அவரை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 1966, 1988 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் அஞ்சல்தலைகள் வெளியிட்டது...