31-December... Selection of Ottawa as Capital city of Canada...
30-December... Creation of Union of Soviet Socialist Republics (USSR) / Soviet Union...
30-December... First US Chinese New Year stamp...
டிசம்பர் 30... அமெரிக்காவில் முதல் முறையாக சீன நாட்டின் புது வருட அஞ்சல்தலை வெளியிடப்பட்ட தினம்...
1992-ஆம் ஆண்டு சீன புது வருடத்தை சிறப்பிக்க அமெரிக்க அஞ்சல்துறை அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
29-December... First Coil Stamp of USA...
டிசம்பர் 29... அமெரிக்காவில் முதல் சுருள் அஞ்சல்தலை வெளியிடப்பட்ட தினம்...
1908-ஆம் ஆண்டு அஞ்சல்தலைகளை விநியோகம் செய்ய வசதியாக சுருள் அஞ்சல்தலைகள் அமெரிக்க அஞ்சல்துறையால் வெளியிடப்பட்டன...
28-December... Inauguration of Westminster Abbey...
டிசம்பர் 28... இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே...
இந்த தேவாலயத்தின் 900-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க 1966-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது...
27-December... Great Americans Postage Stamp Series...
டிசம்பர் 27... பிரபல அமெரிக்கர்களின் அஞ்சல்தலை வரிசை தொடங்கப்பட்ட தினம்...
1980-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட இந்த அஞ்சல்தலை வரிசை 1999-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது...
26-December... Birth Anniversary of Charles Babbage...
டிசம்பர் 26... சார்லஸ் பேபேஜ் பிறந்த தினம்...
கம்ப்யூட்டரின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பேபேஜ் 1791-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் பிறந்தார்... அவரை கெளரவபடுத்த இங்கிலாந்து நாட்டின் அஞ்சல்துறை 1991-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
25-December... Discovery of Celsius Thermometer...
டிசம்பர் 25... செல்சியஸ் வெப்பமானி கண்டுபிடிக்கபட்ட தினம்...
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆன்டர்ஸ் செல்சியஸ் அவர்களால் 1741-ஆம் ஆண்டு செல்சியஸ் வெப்பமானி கண்டுபிடிக்கப்பட்டது... இதனை சிறப்பிக்க சுவீடன் நாட்டின் அஞ்சல்துறை 1982-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
24-December... India Meteorological Department (IMD)...
டிசம்பர் 24... இந்திய வானிலை ஆய்வு மையம்...
1875-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட வானிலை ஆய்வு மையத்தின் 100-வது ஆண்டு நிறைவை கெளரவப்படுத்த இந்திய அஞ்சல்துறை 1975-ஆம் ஆண்டு 25-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
23-December... Foundation Day of Visva-Bharati University...
டிசம்பர் 23... விஸ்வ-பாரதி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட தினம்...
1921-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் கொல்கத்தா சாந்திநிகேதனில் தொடங்கப்பட்ட விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் 50-வது ஆண்டு நிறைவை கெளரவப்படுத்த இந்திய அஞ்சல்துறை 1971-ஆம் ஆண்டு 20-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
22-December... National Mathematics Day (India)...
டிசம்பர் 22... தேசிய கணித தினம்...
கணிதவியலாளர் ஸ்ரீனிவாச இராமனுஜம் அவர்களின் பிறந்த தினத்தை கெளரவப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த தினத்தை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை 2012-ஆம் ஆண்டு 5-ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
21-December... 6th SAARC Summit...
டிசம்பர் 21... 6-வது சார்க் மாநாடு நடந்த தினம்...
இலங்கையின் கொழும்பு நகரில் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற 6-வது சார்க் உச்சி மாநாட்டை சிறப்பிக்க ஸ்ரீ லங்கா அஞ்சல்துறை இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
20-December... Hamma Seawater Desalination Plant...
டிசம்பர் 20... ஹம்மா கடல் நீரை குடி நீராக்கும் ஆலை தொடங்கப்பட்டது...
அல்ஜீரியா நாட்டில் 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹம்மா கடல் நீரை குடி நீராக்கும் ஆலையை சிறப்பிக்க அந்நாட்டின் அஞ்சல்துறை 2006-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
19-December... Goa Liberation Day...
டிசம்பர் 19... கோவா விடுதலை தினம்...
1961-ஆம் ஆண்டு போர்ச்சுகீஸ்ய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதின் 50-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை 2011-ஆம் ஆண்டு 5-ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை வெளியிட்டது...
18-December... World Day of Arabic Language...
டிசம்பர் 18... உலக அராபிய மொழி தினம்...
2010-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கபட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த தினத்தை சிறப்பிக்க எகிப்து நாட்டின் அஞ்சல்துறை 2016-ஆம் ஆண்டு மூன்று அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
17-December... Wright Brothers Day...
டிசம்பர் 17... ரைட் பிரதர்ஸ் தினம்...
1959-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான ஐஸ்னோவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரைட் பிரதர்ஸ் தினத்தை கெளரவப்படுத்த அமெரிக்க அஞ்சல்துறை 2003-ஆம் ஆண்டு 37-சென்ட் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
16-December... Kazakhstan Independence Day...
டிசம்பர் 16... கஜகஸ்தான் நாட்டின் சுதந்திர தினம்...
1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து விடுதலை அடைந்ததின் 20-வது ஆண்டை சிறப்பிக்க கஜகஸ்தான் நாட்டு அஞ்சல்துறை 2011-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
15-December... Foundation Day of Kendriya Vidyalala Sangathan...
டிசம்பர் 15... கேந்திரிய வித்யாலயா கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட தினம்...
1963-ஆம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தை கெளரவப்படுத்த இந்திய அஞ்சல்துறை 2014-ஆம் ஆண்டு 5-ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
14-December... Monkey Day...
டிசம்பர் 14... உலக குரங்கு தினம்...
2000-ஆம் ஆண்டு முதல் உலகின் ஒரு சில நாடுகளில் அனுசரிக்கப்படும் ஒன்று குரங்கு தினம்... வனவிலங்குகளில் ஒன்றான குரங்கை சிறப்பிக்க ஜப்பான் நாட்டு அஞ்சல்துறை 2002-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
13-December... Violin Day...
டிசம்பர் 13... வயலின் தினம்...
இத்தாலி நாட்டில் 15-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டு பல உலக நாடுகளின் இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் வயலின் இசைக்கருவியை சிறப்பிக்க ஆஸ்திரியா நாட்டு அஞ்சல்துறை 2011-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
12-December... Adoption of Russian Constitution...
டிசம்பர் 12... ரஷ்ய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவான தினம்...
1993-ஆம் ஆண்டு தேசிய அளவில் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ரஷ்ய நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவை சிறப்பிக்க அந்நாட்டின் அஞ்சல்துறை 2003-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
11-December... UNICEF Day...
To meet the emergency needs of children in Post-war Europe and China, the UNICEF was established on this day in the year 1946 by the United Nations...
டிசம்பர் 11... ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தொடங்கப்பட்ட தினம்...
1946-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கபட்டு தொடங்கப்பட்ட UNICEF அமைப்பை கெளரவப்படுத்த இந்திய அஞ்சல்துறை 1960-ஆம் ஆண்டு 15-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
10-December... International Human Rights Day...
டிசம்பர் 10... சர்வதேச மனித உரிமைகள் தினம்...
1948-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட மனித உரிமைகள் தினத்தை சிறப்பிக்க ஐக்கிய நாடுகள் சபையின் நியூயார்க் அஞ்சல்துறை இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
9-December... Navy Day (Sri Lanka)...
டிசம்பர் 9... இலங்கை கடற்படை தினம்...
1950-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை கடற்படையின் 60-ஆம் ஆண்டு நிறைவை கெளரவப்படுத்த அந்நாட்டின் அஞ்சல்துறை 2010-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது...
8-December... Adoption of Flag of Europe...
டிசம்பர் 8... ஐரோப்பிய சபையின் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம்...
1955-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்ட கொடியை சிறப்பிக்கும் விதமாக 1969-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் அஞ்சல்துறை இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
7-December... International Civil Aviation Day...
டிசம்பர் 7... சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம்...
1944-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கப்பட்டது... இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் சிவில் விமான போக்குவரத்து தினமாக அனுசரிக்கப்படுகிறது... இந்த தினத்தை சிறப்பிக்க குவைத் நாட்டின் அஞ்சல்துறை மூன்று அஞ்சல்தலைகளை 1999-ஆம் ஆண்டு வெளியிட்டது...
6-December... Emancipation Proclamation...
டிசம்பர் 6... அமெரிக்க நாட்டின் விடுதலை பிரகடன தினம்...
1863-ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் விடுதலை பிரகடனத்தின் 100-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க அமெரிக்கா அஞ்சல்துறை 1963-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
5-December... Death Anniversary of V Veerasingam...
டிசம்பர் 5... இலங்கையின் விஸ்வலிங்கம் வீரசிங்கம் அவர்கள் நினைவு தினம்...
இலங்கையின் தமிழ் ஆசிரியராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணத்தின் கூட்டுறவு இயக்கத்திற்கு காரணமாக இருந்த வீரசிங்கம் அவர்களை ஸ்ரீ லங்கா அஞ்சல்துறை 2016-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டு கெளரவப்படுத்தியது...
4-December... Indian Navy Day...
டிசம்பர் 4... இந்திய கடற்படை தினம்...
இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கப்பற்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது... இந்த கப்பற்படை தாக்குதலில் பெற்ற வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்திய கப்பற்படை தினம் கொண்டாடப்படுகிறது... இதனை சிறப்பிக்கும் விதமாக இந்திய அஞ்சல்துறை 1981-ஆம் ஆண்டு 35-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...
3-December... International Day of Disabled Persons...
டிசம்பர் 3... சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்...
மாற்றுத்திறனாளிகள் அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களை பற்றிய ஒரு விழிப்புணர்வுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபையால் 1992-ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இந்த தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல்துறை 2007-ஆம் ஆண்டு 5-ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது...