ஜூலை 31... டிரினிடாட் தீவு கிறிஸ்டோபர் கொலம்பஸால் 1498-ல் கண்டுபிடிக்கபட்ட தினம்...
டிரினிடாட் தீவின் அஞ்சல்துறை இதன் 400-வது ஆண்டை சிறப்பிக்க 1898-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது...
ஜூலை 31... டிரினிடாட் தீவு கிறிஸ்டோபர் கொலம்பஸால் 1498-ல் கண்டுபிடிக்கபட்ட தினம்...
டிரினிடாட் தீவின் அஞ்சல்துறை இதன் 400-வது ஆண்டை சிறப்பிக்க 1898-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது...
ஜூலை 30... அமெரிக்க நாட்டின் குறிக்கோள் (Motto) சட்டமாக்கபட்ட தினம்...
1956-ஆம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தால் ஒத்துக்கொள்ளபட்டது தான் "In God We Trust" என்ற Motto... அதனை சிறப்பித்து 1954-ஆம் ஆண்டு அமெரிக்க அஞ்சல்துறை 3-சென்ட் மதிப்புள்ள அஞ்சல்தலை வெளியிட்டது...
ஜூலை 29... ஆர்க் டே ட்ரையோம் என்ற போர் நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்ட தினம்...
1836-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் முதலாம் நெப்போலியனால் கட்டப்பட்ட நினைவுச்சின்னத்தை, பிரான்ஸ் நாட்டு அஞ்சல்துறை 1931-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டு கெளரவப்படுத்தியது...
ஜூலை 28... உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம்...
இது, உலக சுகாதார அமைப்பால் 2010-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது... தேசிய அளவிலான கல்லீரல் நோய் விழிப்புணர்வு பற்றிய அஞ்சல்தலை ஒன்றை இந்திய அஞ்சல்துறை 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது...
ஜூலை 27... Bug's Bunny என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தபட்ட தினம்...
1940-ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட Bug's Bunny-ஐ சிறப்பிக்க அமெரிக்க அஞ்சல்துறை 1997-ஆம் ஆண்டு 32-சென்ட் மதிப்புள்ள அஞ்சல்தலை வெளியிட்டது...