13-Oct... Establishment of Greenwich Observatory as Prime Meridian...
13-October... Death Anniversary of Sister Nivedita...
அக்டோபர் 13... சகோதரி நிவேதிதை நினைவு தினம்...
அயர்லாந்து நாட்டில் பிறந்து இந்திய பெண்களின் முன்னேற்றத்திற்காக சுவாமி விவேகானந்தரோடு அவரின் சீடராக வாழ்ந்த சகோதரி நிவேதிதை அவர்களை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 1968-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது...
12-October... Birth Anniversary of Vijay Merchant...
அக்டோபர் 12... விஜய் மெர்ச்சன்ட் பிறந்த தினம்...
1911-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஜய் மெர்ச்சன்ட் அவர்களை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 1996-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது...
11-October... Birth Anniversary of Jayaprakash Narayan...
அக்டோபர் 11... ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் பிறந்த தினம்...
இந்திய சுதந்திரதிற்காக போராட்டம் நடத்தி நமக்கு சுதந்திரம் பெற்று தந்த மாபெரும் வீரர்களில் ஒருவரான ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களை கெளரவபடுத்த இந்திய அஞ்சல்துறை 1980 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் அஞ்சல்தலைகள் வெளியிட்டது...
10-October... World Day Against the Death Penalty...
அக்டோபர் 10... உலக மரண தண்டனை ஒழிப்பு தினம்...
2003-ஆம் ஆண்டு உலகளவில் அனுசரிக்கப்படும் இந்த தினத்தையும், போர்ச்சுகல் நாட்டில் மரண தண்டனை ஒழிப்பின் 150-ஆம் ஆண்டு நிறைவை சிறப்பிக்க இரண்டு அஞ்சல்தலைகளை 2017-ஆம் ஆண்டு அந்நாட்டின் அஞ்சல்துறை வெளியிட்டது...
9-October... Formation Day of Universal Postal Union (UPU)...
அக்டோபர் 9... சர்வதேச அஞ்சல் ஒன்றியம் உருவான தினம்...
1874-ஆம் ஆண்டு சர்வதேச தபால் போக்குவரத்தை சீரமைக்க உருவாக்கப்பட்ட இந்த ஒன்றியத்தின் 75-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை 1949-ஆம் ஆண்டு நான்கு அஞ்சல்தலைகளை வெளியிட்டது...
8-October... Indian Air Force Day...
அக்டோபர் 8... இந்திய விமானப்படை தினம்...
1932-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவால் துவங்கப்பட்ட நம் நாட்டின் விமானப்படையை இந்திய அஞ்சல்துறை 1958, 1982, 1992 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் அஞ்சல்தலைகள் வெளியிட்டு கெளரவப்படுத்தியது...






